குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் வாலாம்பிகை அவர்கள் 21-05-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் இணுவிலைச் சேர்ந்த பொன்னையா இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பரஞ்சோதி, சாரதாதேவி(இலங்கை), விஜயா, சுமதி(கனடா), காலஞ்சென்ற சிவசோதி, பொன்னன், மோகன், றஜனி, கலைச்செல்வி ரோகினி(சுவிஸ்), சச்சிதானந்தம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திரிபுரநாதன், புவனாம்பிகை(இலங்கை), வைத்தியநாதன்(பேர்லின்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், சந்திரிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நாகேஸ்வரி, ஞானலிங்கம், சாந்தகுமாரி, பாலச்சந்திரன், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம், கணேசலிங்கம், கண்ணன், வசந்தி, கதிர்காமலிங்கம், சந்துரு, வித்தியா, சனுாஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவா, சியா, சிலோ, சியாமினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
பாபு, கோபு, பிரபு, சுதன், அனு, ரஜீவ், ரூபா, விதுசன், லவேனன், லகீனா, நிவேதா, அபிசா, ஆதுசியா, அஜந்தா, பானு, சபீனன், கவின், கரினி, நிதேஸ், நிலேஸ், பிருதிவி, பிரமிகா, பிருத்திகன், நித்தியா, அம்மு ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கரனி, அஸ்வின், அஸ்விதா, அனுஸ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |