மாதகல் ஆசீர்வாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், 12 ஆண்டுகள் டென்மார்க்கை வதிவிடமாகவும், தற்பொழுது லண்டனில் வதிவிடமாகவும் கொண்ட வின்சென்சியா ஜெறோசா உமாமகேசன் அவர்கள் 9-8-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம், இராக்கினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வசந்தகுலசிங்கம், அசுபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உமாமகேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
கீத், சியானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜேம்ஸ் - றஞ்சன், றோகினி, றஞ்சினி, காலஞ்சென்ற மாலினி, நிர்மலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரேந்திரநாத், மோகனா, ராதாகிருஸ்ணன், யமுனா, அப்பாலை, மல்லிகா, றஞ்சினி, ஞானராஜா(ஜுவா), இருதயநாதர், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.