பிறப்பு : 27 டிசெம்பர் 1949 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2012
வானொலி அறிவித்தல்
புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சரவணை கிழக்கு வேலணையை வசிப்பிடமாகவும், இல:154, 12 வது தெரு, ஸ்ரீகிருஸ்ணாநகர், மதுரவாயில் இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி பரஞ்சோதி அவர்கள் 10-08-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முத்துக்குமாரு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரஞ்சோதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரோகினி(லண்டன்), தாரணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற குமுதினி, வாமினி(பிரான்ஸ்), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சயந்தகுமார்(செட்டி) அவர்களின் பாசமிகு சகோதரியும்,
சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, திருநாவுக்கரசு மற்றும் அருளானந்தம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பேரம்பலம்(முத்துலிங்கம்), சண்முகநாதன், தனலெட்சுமி மற்றும் தவமலர்(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நடராசா, பூமணி, சிவக்கொழுந்து, நாகம்மா, கனகேஸ்வரி, ஜெகதீசன், அகிலேஸ்வரன் ஆகியோரின் சகலியும்,
அருள்ரூபன், மனோகரன், பாஸ்கரன், சிவமாறன் ஆகியோரின் மாமியாரும்,
ஆனந்தம் - சந்தானலக்ஷ்மி, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் அன்னம்மா, இராசரெட்ணம் - கமலேஸ்வரி, சிதம்பரநாதன் - சந்திரமதி ஆகியோரின் சம்மந்தியும்,
தபிஷன், மதீஷன், தனுஷன், மதுஷா, கிஷான், கிரிஷிகா, கிபிஷன், தீட்ஷணா, சகானா, சபரீஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 19-08-2012 ஞாயிற்றுக்கிழைமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.பகல் 2:00 மணியளவில் போரூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.