திருமதி பாக்கியம் விநாயகமூர்த்தி
பிறப்பு : 22 மே 1924 — இறப்பு : 12 செப்ரெம்பர் 2012
வானொலி அறிவித்தல்

வேலணை கிழக்கு வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா பொள்லாச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் விநாயகமூர்த்தி அவர்கள் 12-09-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், தம்பிப்பிள்ளை பெரியதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதேவி(ஜேர்மனி), ஸ்ரீபதி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகலிங்கம்(ஜேர்மனி), இராசமலர்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, கணபதிப்பிள்ளை, கார்த்திகேசு, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தியாகராஜா, ஸ்ரீதேவி(கனடா), மணிமேகலாதேவி(வேலணை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜராஜன், கஜராஜினி, சிந்துஜா, மயூசன், மேகஜா, மேகீசன், சரண்ஜா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 13-09-2012 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மதியம் 2:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சண்முகலிங்கம்
தொடர்புகளுக்கு
ஸ்ரீதேவி - மகள் — ஜெர்மனி
தொலைபேசி:+49681776843
ஸ்ரீபதி - மகன் — இந்தியா
செல்லிடப்பேசி:+919894525580
Loading..
Share/Save/Bookmark