அன்னை மடியில் : 24 டிசெம்பர் 1969 — ஆண்டவன் அடியில் : 19 செப்ரெம்பர் 2012
நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூரை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா Bristol ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமுதினி சுந்தரலிங்கம் அவர்கள் 19-09-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை பராசக்தி தம்பதிகள் இராமநாதர் கந்தையா மற்றும் கந்தையா பொன்னம்மா(வவுனியா) தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வேலுப்பிள்ளை சுந்திரலிங்கம்(இளைப்பாறிய சங்கீத ஆசிரியர்) சரஸ்வதி(இளைப்பாறிய தாதியார்) தம்பதிகளின் அன்பு மகளும்,
பாமினி, தமிழ்மாறன், பன்னீர்செல்வன், சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஷ்ணமூர்த்தி, மதிவதனி(கௌரி), ஜெயரஞ்சினி(ஜெகா), லக்ஷ்மன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வே.இராசலிங்கம், பா.சிவபாக்கியம், க.சரோஜாதேவி, நா.புஷ்பராணி, நா.மணிமேகலை, த.சந்திரவதனா, க.பராசக்தி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
க.சிவபாதம் - லீலா, க.வசந்தகுமார் - நிரஞ்சனி, க.தவபாதம் - சகுந்தலா ஆகியோரின் அன்பு மருமகளும்,
குருதர்ஷன்(கிருஷ்ணா), பிரியதர்ஷன்(குட்டி), றோய், சுரமியா, றிஷிபன், பகவான், தஷான், கீரன் ஆகியோரின் மைத்துனியும்,
அபிரா, மயூரா, மதீரா ஆகியோரின் பாசமிகு சிற்றன்னையும்,
சசிகஜன் அவர்களின் பாசமிகு சின்ன மாமியும்,
அஷ்வினி, கவின், லினோஷ், லக்ஷானி, ஹரிஷ்ராம் ஆகியோரின் அன்பு அத்தையும்,
ரிஷ்வி, ருஷ்வி ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைகள் முடிவடைந்த பின்னர் Barnett multicultural community centre, Algernon Road, Hendon, NW4 3TA என்னும் முகவரியில் நண்பகல் 12:00 மணியிலிருந்து மாலை 4:00 மணிவரை மதிய போசனம் அளிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஒளியே உன்னை தேடுகின்றோம் நிலவு போல இருக்கும் உன்முகம் காண ஏங்குகின்றோம் ! எங்கு சென்றாய்
வீட்டு முகவரி:- Suntharalingam Thamilmaran 29,Corbins Lane, South Harrow, HA2 8EN