பிறப்பு : 7 ஓகஸ்ட் 1946 — இறப்பு : 14 ஒக்ரோபர் 2012
வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு ஜெயகாந்தன் அவர்கள் 14-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு மனோன்மணி தம்பதியரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், மற்றும் இராஜராஜேஸ்வரி தம்பதியரின் மருமகனும்,
காந்தரூபி அவர்களீன் அன்புக் கணவரும்,
ஜெனிற்(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சரண்யா(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விஜயகாந்தன்(முன்னாள் இலங்கை வங்கி - யாழ்ப்பாணம்), லட்சுமிகாந்தன்(ஜேர்மனி). ராஜாமணி(வவுனியா), விமலாதேவி(ஜேர்மனி), சிறிகாந்தன்(பிரான்ஸ், முன்னாள் இலங்கை வங்கி - யாழ்ப்பாணம்), ரோகினிதேவி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று மு.பகல் 9:00 மணிதொடக்கம் பி.பகல் 5:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 17-10-2012 புதன்கிழமை அன்று மு.பகல் 9:00 மணிதொடக்கம் பி.பகல் 3:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.