திருவாளர் சின்னத்துரை பொன்னம்பல வன்னிய மாப்பாண கதிர்காம முதலியார்
(வன்னிய மாப்பாண கதிர்காமமுதலியார் - பன்முக சேவையாளர், தேசகீர்த்தி என்ற கெளரவபட்டம் பெற்றவர், முன்னாள் மானிப்பாய் பிரதேசசபைத் தலைவர், மானிப்பாய் மேற் விவசாய சம்மேளனத்தின் தலைவர், அபிவிருத்தி சங்கத் தலைவர், யாழ் மாவட்ட தேசவள விவசாயிகளின் சம்மேளனத்தின் தலைவர், சமாதான நீதவான், விவசாயிகளின் தந்தை என்ற விருதினை இலங்கை அரசால் பெற்றவர், முன்னாள் தமிழ் காங்கிரசின் செயலாளர், அகில இலங்கை சுருட்டு தொழிலாளர் சங்கத் தலைவர்)
மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர் சின்னத்துரை பொன்னம்பல வன்னிய மாப்பாண கதிர்காம முதலியார் அவர்கள் 14-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை முதலியார்(பேராசிரியர் - சிங்கப்பூர் பென்சினியர்), விசாலாட்சி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், செல்லையா, மாருதப்பிரவிகவல்லி தம்பதியினரின் அன்பு மருமகனும்,