யாழ்.சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாலனதேவி துரைராஜா அவர்கள் 15-10-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி கணவதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஞானம், காலஞ்சென்ற கமலம், தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, தர்மலிங்கம், புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விவேகானந்தராசா(ராசன் இலங்கை), காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(நேசன்), நிர்மலா(மாலா-இலங்கை), குமரேஸ்(மோகன்-ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும்,
ஜெயமலர்(ஜெயா), சசிதரன்(தவம்), பிரேமளா ஆகியோரின் அன்பு மாமியும்,
நிறோசன், நிஷாந்தன், நிஷாந்தினி, கிருஷாந்தன், சிவசாந்தன், மகிந்தன், சுஜானி, மேறுஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 16-10-2012 செவ்வாய்கிழமை அன்று நடைபெற்று பின்னர் இணுவிலில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.