யாழ்ப்பாணம் மணல்தறை வீதியைப் பிறப்பிடமாகவும், மாமூலை முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 22-10-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரேசு முருகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இளந்திரயன்(T.O.- RDA - முல்லைத்தீவு), தர்சினி(பிரித்தானியா), துளசிதாஸ்(முல்லைத்தீவு), நிசாந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீதர்சினி(முல்லைத்தீவு), சிவசங்கர்(பிரித்தானியா), தர்மினி(முல்லைத்தீவு), நந்தீஸ்வரன்(கண்ணன் - பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜானா, கஜானன், சுபத்திரன், சரண்ணியா, சதுர்ஜா, விதுஷா, விகல்ஜா, வினுஜா, ஆரணி, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 23-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3:00 மணியளவில் மாமூலை முல்லைத்தீவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மாமூலை கற்பூரப்புல்லு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.