(முன்னாள் மொடோன் ஸ்ரோஸ் உரிமையாளர், முன்னாள் வவுனியா மாவட்ட அபிவிருத்திச் சபை(TULF) உறுப்பினர், முன்னாள் நெளுக்குளம் கிராமசபை உறுப்பினரும், முன்னாள் தமிழரசுக்கட்சி செயற்குழு உறுப்பினர்)
வவுனியா நெளுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைகாளி சிற்றம்பலம் அவர்கள் 23.10.2012 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைகாளி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அரியமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
திருநாவுக்கரசன்(சிறி), மங்கையற்கரசி(றஜனி), சிவ அன்பரசன்(சிவா), வடிவேற்கரசன்(சசி), சிவநேச அரசன்(கிரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருந்தவராஜன்(ராஜன்), சிவயோகமலர்(யோகா), விஜியலட்சுமி(விஜி), சாந்தராணி(சாந்தி), அருள்பிருந்தா(பிருந்தா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சரஸ்வதி, சுப்பிரமணியம் மற்றும் இராஜேஸ்வரி, குணமலர், புஸ்பவதி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, வில்வராஜா, அழகராஜா, அழகரத்திம், அரியரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறின்ஸ், றொஷானி, கௌசல்யா, கௌதமன், சந்தோஷ், பிரகாஷ், விதுசன், விசோத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில்(நெளுக்குளம்) நடைபெற்று, பி.ப 1:00 மணிக்கு நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.