முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கல்வியங்காட்டை பூர்விகமாகவும், சுவிஸ் Münchenstein (Basel land) ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 28.07.2010 புதன்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் இராசமணி(முள்ளியவளை) தம்பதியினரின் அன்பு மகனும், சிவராஜா, விமலாவதி(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
கார்த்திகேயினியின் அன்புக்கணவரும்,
கிருசாந்தன், ஜெனுசன், ஜாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோராணி(சுவிஸ்), ஞானம்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(இந்தியா), மகேஸ்வரன்(கல்வியங்காடு), ரேணுகாதேவி(முள்ளியவளை), பூமா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
தம்பிராஜா(வேலு- சுவிஸ்), தனா(சுவிஸ்), பஞ்சவர்ணம்(இந்தியா), டானி(கல்வியங்காடு), சத்தியசீலன்(முள்ளியவளை), பரமதாஸ்(பாண்டி - சுவிஸ்), சந்திரன், கமலலோஜினி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06.08.2010 வெள்ளிக்கிழமை முதல் 09.08.2010 திங்கட்கிழமை வரை தினசரி காலை 10:00 மணிமுதல் பிற்பகல் 16:30 மணிவரை Friedhof Am Hornli, Hornliallee 70, 4125 Riehen, Basel, Ch என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரிகைகள் 10.08.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற்று பிற்பகல் 13:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.