22-09-1995 அன்று நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத்தாக்குதலின் போது மரணமான நாகர்கோவிலைச் சேர்ந்த ந.உமாதேவி, சு.பழனி, சு.தர்சினி, ம.கணநாதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள்.
இள வயதில் மடிந்த உங்களை இன்றும் நினைத்து அழுகின்றோம் பதினேழு ஆண்டுகள் கடந்தாலும் பாசத்துடன் நினைவு கூருகின்றோம்!.
பள்ளி சென்ற உங்களோடு பலரை அள்ளி எடுத்தான் ஒருநொடிப்பொழுதில் அந்நியனின் "புக்காரா" வடிவில் காலனவன் அன்று முப்பொழுதும் நினைத்து வாடுகின்றோம் என்றும்!
எங்களை விட்டு பிரிந்து சென்ற உங்களின் நீங்கா நினைவுகளோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!