அமரர் இந்திராதேவி கிட்ணமூர்த்தி
அன்னை மடியில் : 13 யூன் 1951 — ஆண்டவன் அடியில் : 17 டிசெம்பர் 2011

யாழ் அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திராதேவி கிட்ணமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எம் நினைவுப் பரிசாகிய
இக் கவிதை உங்களுக்கு
உங்கள் நினைவுகளே
எம் அனைவருக்கும் மாபெரும் பரிசு
பூவுலகில் எம்மை தவிக்கவிட்டு
விண்ணுலகம் சென்ற அருந்தெய்வமே!

அகமகிழ எமக்கு வாழ்வளித்த
எங்கள் ஆருயிர் ராணியே
வாட்ட முகம் கண்டதில்லை
புன்னகையுடனே எம்மை வரவேற்பீர்கள்
நாடிவரும் நமக்கெல்லாம்
நாட்டமுடன் உதவி நிற்பீர்கள்
உங்கள் வீடு உங்கள் வரவை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது..

நாங்களும் உங்கள் வரவிற்காய்
ஏங்கிக்கொண்டு இருக்கின்றோம்
உங்கள் அறையில் நுழைந்ததுமே
கண்ணீரை நாம் சிந்துகின்றோம்
தெய்வமாய் எம் அருகிலேயே இருப்பதை
நினைத்து எம் மனதை நாம்
தேற்றிக் கொள்கின்றோம்..

எமக்கெல்லாம் கிடைத்த - உங்கள்
அன்பும் பாசமும் நீங்கள் இறந்த பின்பும்
நிச்சயம் இறப்பதில்லை
தெய்வத்தின் திருவடி சேர்ந்த
உங்களை துதிப்போமே
நாங்கள் நித்தமும்...

எங்களின் நீங்கா துயரில் எம்மோடு துயர் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும், தொலைபேசி மூலமும் நேரிலும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரிகையில் இறுதிவரை நின்று சகல உதவிகளைப் புரிந்தவர்களுக்கும் அன்னாரின் ஆத்மசாந்தி கிரியைகளுக்கு வந்து கலந்துகொண்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.



தகவல்
கணவர், குடும்பத்தினர்
Loading..
Share/Save/Bookmark