தோற்றம் : 10 டிசெம்பர் 1947 — மறைவு : 21 சனவரி 2012
குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த மனுவிற்பிள்ளை செல்வராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் ஆறாது அப்பா நம் துயரம் - நீங்கள் இல்லையென்பது இன்னமும் தான் ஏற்க மறுக்கிறது நம் இதயம் - ஏனெனில் நீங்கள் எம் உள்ளங்களில் வாழ்கின்றீர்கள், உங்கள் இழப்பை எண்ணியெண்ணி - இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால் இன்று எங்கள் விழிகளிலே வழிகின்றதே கண்ணீர் துளிகள்.
அன்பின் திருஉருவமும் புன்னகை பூத்த பொன்முகமும் எமைக் கலங்கவிட்டு சென்றதேனோ? காத்திருந்து பறித்ததென்ன கயவனே உன் நீதியென்ன கண்களிலே நீருமில்லை - காத்திருக்க பொறுமையுமில்லை உங்கள் நினைவு மட்டும் மாறவில்லை அப்பா
மனைவியோ கதறியழ, பிள்ளைகளோ பரிதவிக்க, உறவுகளோ வாடுகின்றனர், பேரப்பிள்ளைகளோ தேடுகின்றனர், ஆறுதலே நீதானப்பா! ஆறுதல் எமக்கேது ஆறுதலை தந்திடவே திரும்பி நீங்கள் வந்திடுவீரோ! நினைவில் எம்முடனும் நியத்தில் இறைவனிடமும் கலந்திருக்கும் உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 21.01.2012 சனிக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் பொற்பதி குடத்தனை புனித இராயப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அத்தோடு 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று 16:00 மணியளவில் HOLLAND, SCHAGEN என்னும் இடத்தில் இரங்கல் திருப்பலி நடைபெறும் மற்றும் FRANCE ல் இரங்கல் திருப்பலி நடைபெறும். இவ் இரங்கல் திருப்பலியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.