யாழ் வதிரி மணியாவத்தையை பிறப்பிடமாகவும், ஜோ்மனி Pforzheim ஐ வதிவிடமாகவும் கொண்ட மயுறா நித்தியானந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது குடும்ப தோட்டத்தில் உதிர்த்த மயுறாவே! உன் மலர்வில் நாம் கண்ட கனவுகள் எத்தனையோ அத்தனைக்கும் விடைகாணவோ, என்னவோ எம்மை விட்டு எளிதில் சென்று விட்டாய்,
உன் பிரிவின் துயரத்தில் உன் உருவம் காண்பதற்காக மறு ஜென்மம் என்னும் சொல்லை கூட மனதார நம்புகின்றோம் நாங்கள் நீ வருவாயென!
எமக்கென்னவோ உன் விதியை எழுதும் போது, இறைவன் கூட உறங்கிவிட்டானோ புரியவில்லை! எனினும் நீண்ட ஆயுளுடன் மீண்டும் எம் குடும்பத்தில் மலர்வாயென நம்பிக்கையுடன் உயிர் வாழ்கின்றோம் நாமும் இவ் உலகில் எங்கள் துயர் துடைக்க நீ வருவாயென! |