கோப்பாய் மத்தி வெள்ளெரு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி நாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை இன்று கண்ணீர் மல்க விட்டு சென்றதேனோ? விண்ணில் விடிவெள்ளியாயய் போன பின்பும் எங்கள் விழியில் ஈரம் தனை தந்ததேனோ? எத்தனை ஆண்டுகள் சென்றாலும் என்றென்றும் உன் நினைப்பில் நாமிருப்போம்!!!
06-06-2012 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும், மதியபோசன விருந்தும் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.