யாழ். அராலி வடக்கைப் பிறப்பி்மாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகுப்பிள்ளை மாணிக்கவாசகர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு கழிந்தாலும் - உன் அன்பு வதனம் - எம் மனதை விட்டு நீங்கவில்லை.
அன்புக்கு இலக்கணமாய் பாசத்தின் பிறப்பிடமாய் தாய்க்கு அன்புத் தனயனாய் தாரத்திற்கு காதல் கணவனாய் குழந்தைகளுக்கு நல் வழிகாட்டியாய் வாழ்ந்த காலமது - எம் மனம் விட்டு நீங்காது.
உதவியென்று உன் நிழல் தேடி வந்தவர்க்கு ஆலமரமாய் நின்று நிழற் குடை தந்தவனே ஒற்றுமையின் மகத்துவத்தை - உன் உறவுகளைக் கூட்டி போதித்த ஆசானே - நீ வாழ்ந்த காலமது - எம் நினைவை விட்டு நீங்கவில்லை.
உன் பேரக் குழந்தைகளுக்கு வண்ண முகம் காட்டி - உன் வடிவழகும் காட்டி சித்திரக் கதை கூறி சிந்திக்கச் செய்தவனே - நீ வாழ்ந்த காலமது - எம் நினைவை விட்டு நீங்காது ஓம் சாந்நி சாந்நி சாந்நி