புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பூர்வீகமாகவும், கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நந்தகுமார் கதிர்செல்வன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான வார்த்தை எங்கே? அழகான சிரிப்பு எங்கே? பணிவான நடை எங்கே? பண்பான குணம் எங்கே? இதையெல்லாம் பறித்தவன் தான் எங்கே...
போய்ட்டு வாரேன் என்று சென்றதாம் எங்கள் உயிர் வரும் போது உடல் வந்தது உயிர் எங்கே உங்களை இழந்து அம்மா, அப்பா படும் வேதனையை யாரிடம் நாம் சொல்வோம் ஐயா.....
உங்கள் மனைவி இரு பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வீர் என்று நம்பியிருந்தோம் ஐயா... இப்படி நடு வழியில் அழைத்தவன் எவனோ?
சகோதரன் என்று ஒரு துணை நீ மட்டும் இருந்தாயே அதையும் மனம் பொருக்காமல் அழித்துவிட்டான் அந்த ஆண்டவன் - நீங்கள் இறக்கவில்லை உன் உறவுகள் நாங்கள் தான் இறந்துவிட்டோம் ஐயா..
உங்களை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டாலும் என்றோ ஒரு நாள் நாங்கள் உங்களிடம் வருவோம் என்று ஆறுதலுடன் வாழ்கின்றோம்....
உயிரே இது எங்கள் நெஞ்சில் துயரத்திலிருந்து ஒரு துளி இதில் சமர்ப்பிக்கின்றோம் அண்ணா!
உங்கள் பிரிவின் துயரால் வாடும் தாய், தந்தை, மனைவி - நிலாயினி, பிள்ளைகள் - டிசானி, டிசான், சகோதரிகள்..