செல்வன் அனுஷாந் இந்திரகாந்தன்
மலர்வு : 11 யூன் 1990 — உதிர்வு : 20 யூலை 2009

ஏழாலையைச் சேர்ந்த இந்திரகாந்தன் இரஞ்சிதா தம்பதிகளின் அன்பு மகனும், கனடாவை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டிருந்த அனுஷாந் இந்திரகாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு மலர்

தொப்புள்கொடி உறவைத்தந்த மகனே
புயலாய் வந்த
புதுமலரே
வாடாமல் வாசம் வீசி
வசந்தமாய் எங்களோடு வாழ்வாய் என இருக்க
உன் அம்மாவை கட்டி அணைத்து
முத்தம் தந்து
பிறந்தநாள் வாழ்த்தையும் ௯றி சென்ற நீ
யார் கண்பட்டதோ
வாடாத எம் மலரை
பிடிங்கி ஏறிந்தனரோ.......
என் அனு குட்டியே
உன்னோடு பேசாமல்
என்னால் இயல்பாக
வாழமுடியவில்லை அதனால்தான்
தினமும் என்னுடன் நானே
பேசிக்கொள்கின்றேன்
உன்னுடன்
பேசுவதாக நினைக்கின்றேன்
இதயத்தை
கல்லாக மாற்றிவிட்டு
அந்த கடைசி நாள் காலைப்பொழுதை
நினைத்துப் பார்த்தால்
இப்பொதும் என் கண்களில்
இரத்தம் வருகின்றது…………
தனிமையில் இருந்து
உனனைப்பற்றி நினைக்கும்
போதெல்லாம்
உதிரும் கண்ணீர்துளிகளே
என்தொப்புள் கொடிக்கு
சாட்சியம்........

மலர்ந்த உன் நினைவுகள்
மறைக்கப்பட்ட
உன் கனவுகள் எத்தனை எத்தனை...................
உறைந்துபோய் இருக்கும் உறைபனிபோல்
உணர்வுகள்
உறங்கியும் உறங்காமல் இருக்கும் இமைகள்
உறங்க நினைத்து உருளும்போது
சுற்றி சுற்றி வ௫ம்
உன் நினைவுகள் பல பல.....................
நீ விட்டு சென்ற ஒவ்வொரு
சுவடுகளிலும்
உன்னுடைய உயிருள்ள
ஒவ்வொரு
நினைவுகளையும் தேடுகின்றோம்
தேடுகின்றோம்
தேடிக்கொண்டிருக்கிறோம்...... ............!!!

மகனே நீ எங்களை விட்டு பிரிந்தநாள் முதல்
நாம் உயிரை பிரிந்த உடலாய் அலைகின்றோம்
உன்னை நாம் பிரிந்தநாள் முதல்.........
நம்மை நமக்கே பிடிக்கவில்லை
எதற்கு இனியும் இந்த வாழ்கை நமக்கு
நீ நம்மை விட்டு பிரிந்த பிறகு.......
நல்ல உடை உடுத்த பிடிக்கவில்லை
அழகை பார்த்து ரசிக்கவும் பிடிக்கவில்லை
உன் இளையவர்களின் அழகை பார்த்து
சந்தோசப்படவும் முடியவில்லை
மகனே நீ இ்ன்றி அத்தனையும் நமக்கு பிடிக்கவில்லை
அதனால் தானோ நாம் அழவும் செய்கின்றோம்
மகனே நீ இன்றி எத்தனை கொடுமை
அலைகடல்௯ட வெய்யிலில் வற்றிவிடும்
நம் கண்ணில் கண்ணீா் வற்றவில்லை
மகனே நீ இன்றி மொத்தமாய் தனிமை
நீ எங்களை விட்டு பிரிந்தநாள் முதல்...........
உன் அன்பில் வாழ்வோம் என்ற ஆசையிலே
நம்மை மறந்து வாழ்ந்தோம்
உன் விதியோ அல்லது நம்முடைய விதியோ
நம்முடைய தலை எழுத்து வழி தவறியது
உன்னை நாங்கள் பிரிய
மகனே நீ எங்களை விட்டு பிரிந்தநாள் முதல்
நாங்கள் உயிரை பிரிந்த உடலாய் அலைகின்றோம்...........

உன் பிரிவால் வாடும்
உன் அப்பா, அம்மா, தம்பிமார் நிவிஷாந், வினுஷாந்
ஆசைமாமா குடும்பம், அம்மப்பா

தகவல்
இந்திரகாந்தன்(அப்பா)
தொடர்புகளுக்கு
இந்திரகாந்தன்(அப்பா) — கனடா
தொலைபேசி:+16474354430
செல்லிடப்பேசி:+16478696449
Loading..
Share/Save/Bookmark