அமரர் ஜீவகாந் நித்தியானந்தராஜா
(ஜீவன்)
பிறப்பு : 6 யூன் 1985 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2011
திதி : 29 யூலை 2012

மல்லாவியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இறுதியாக வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜீவகாந் நித்தியானந்தராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு கடந்தாலும் ஆறாது உன் துயரம்
நினைக்க நினைக்க நாடி நரம்பு எல்லாம்
விறைக்கிறதே நடந்தது கனவாக மாற வேண்டுமென
இறைவனை வேண்டுகின்றோம் மகனே நீ
எங்களை விட்டு பிரிந்த நாள் முதல்
நாம் உயிரை பிரிந்த உடலாய் அலைகின்றோம்

உன் விதியோ அல்லது நம்முடைய விதியோ
நம்முடைய தலை எழுத்து வழி தவறியது
சில ஆண்டுகளில் மணக்கோலம் காண்பாய்
என எண்ணியிருந்த வேளையில்
காலான் உன்னை பறித்தது தான் ஏனோ ?

பாலறுகு வைத்து அறுகரிசி போடுவோம்
என எண்ணியிருந்த எம் கையால்
வாய்க்கரிசி போட வைத்துவிட்டு
போன இடம் தான் எங்கே ?
எங்கள் உயிர் உள்ளவரை உன் நினைவுகள்
எம் நெஞ்சில் நீங்காது நிற்கும்

ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கி.நித்தியானந்தராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41793687324
நி.நிசாந்தன் — இலங்கை
தொலைபேசி:+94243249298
Loading..
Share/Save/Bookmark