அமரர் கமலாதேவி துரைராசா
மலர்வு : 8 சனவரி 1940 — உதிர்வு : 20 யூலை 2012

வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் துர்க்கா ஹன்ரோன் வைன்பில்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா கமலாதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் நன்றிநவிலலும்.

தெய்வத்தின் திருவுருவே எம் தேவிவடிவானவளே
உள்ளத்தின் அகல்விளக்கே உமையவளின் மறுபிறப்பே
சிறுவயதில் இருந்து எம்மைச் சீராட்டி வளர்த்தவளே
ஒருகுறைதான் வைப்போமா உனைச் சுமக்க மறப்போமா
புலம்பெயர்ந்து வந்து விட்டால் போய் விடுமா
தாய்ப்பாசம்

புகழுக்காய் பொருளுக்காய் உமை இழக்க நினைப்போமா
உலகத்தில் எமை படைத்த உத்தமியே உன் வயிறு
கடவுளவன் வாழுகின்ற கருவறைதான் அறிவோமே
அம்மாவே உன்பெருமை அறியாதார் மூடர் அம்மா
அறிவற்ற அவர் செயல்தான் அவருக்குத் தண்டனையே
சந்தனமாய் நீ தேய்த்து தருவாய் நல்வாழ்வை

உந்தனையே நாம் மறந்தால் உய்வோமா உலகினிலே
அம்மா என்னும் மூன்றெழுத்தில் அகிலமே அடக்கமம்மா
அதை அறியாதார் பாவி அம்மா ஆண்டவனின் வடிவம் நீ
உன் மடியே சொர்க்கமம்மா உலகத்தில் வேறுசுகம்
உள்ளதெல்லாம் பொய்யம்மா உணர்ந்து கொண்டால்
அவர்வாழ்வில் துன்பமது நெருங்காது தூயவளே உன்பாதம்
பூசித்து நாம்
வாழ்வோம் உன் பொன்னடியைப் போற்றி நிற்போம்

பூவுலகில் எங்களது பொக்கிஷம் தான் எம் அம்மா
இதயம் எனும் பெட்டியிலே நாம் இறுக்கமாய்ப் பூட்டி வைப்போம்
துணையிழந்த போதும் எம்மைச் சீருடனே வளர்த்தெடுத்தாய்
தனித்து நின்று எத்தனையோ சாதனையை நீ படைத்தாய்

ஆண்டவனின் துணையுடனே
எங்கள் அனைவரையும் காத்திருந்தாய்
உலகத்தை உன் கையில் அடக்கிவைத்து
நாம் சிரிப்போம் என என்னும்
போதினிலே எம்மைவிட்டுப் போனதென்ன
முப்பத்தொரு நாட்கள் ஆனாலும்
ஆறவில்லைக் காயமம்மா
முழுநிலவு போன்ற முகம் முன்வந்து
கலங்கவைக்க
நித்திரையும் தொலைந்தம்மா
நிம்மதியும் போனதம்மா

மீண்டும் உந்தன் வயிற்றினிலே பிறந்திருந்து பிரியாமல்
உன்மடியில் உயிர்விடத்தான் இறைஞ்சுகின்றோம்
இறைவனையே இப்போது
உன் ஆத்மா சாந்தி பெற வேண்டுகின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

எம் குலவிளக்கு அணைந்த வேளையில், எம் துயர்துடைக்க நேரில் வந்து எமைத் தேற்றிய அனைத்து அன்புள்ளங்களுக்கும், தொலைபேசி வழியாக ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர்ப் பாசுரங்கள் வெளியிட்டோருக்கும், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட அனைவருக்கும், மேலும் பல உதவிகளைச் செய்த உள்ளங்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெர்வித்துக்கொள்கின்றோம்.

19-08-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் Hotel Thurgauerhof, Thomas-Bornhauser-Strasse 10, CH-8570 Weinfelden என்னும் முகவரியில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெறவிருப்பதால் அனைவரும் எம் தாயின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து, தொடர்ந்து மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரவி(குமார் - மகன்) — சுவிட்சர்லாந்து
தொடர்புகளுக்கு
ரவி(குமார் - மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763223427
Loading..
Share/Save/Bookmark