அமரர் மார்க் பகவத்சிங்
(Markwood Construction Owner)
தோற்றம் : 15 டிசெம்பர் 1964 — மறைவு : 18 ஓகஸ்ட் 2011

யாழ் நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோ, மார்க்கம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க் பகவத்சிங் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்னமும் உறங்குகிறீர் இதன் பெயர் தான் மரணமா?
காலம் ஆண்டென்ற பெயரில் கரைகிறது...
இருப்பும், இடமும் அற்றபின்னும் காலத்தின்
உள்ளே உங்கள் இருப்பு / இருப்புக்கும்,
இல்லாமைக்கும் ஏணிவைத்துப் பார்க்கிறது
உறவின் எண்ணம்...
நீங்கள் இனி வரமாட்டீர்களா?

கருவில் உருவாகி, சதையின் சதையாய்
வாழ்வின் அத்தனை சாரமும் கொண்டு
கூட வந்தவனே - பாதியிற் போனது
யார் வகுத்த நியதி...
ஒரு மதங்கொண்ட யானைபோல
வந்தது மரணம்..
காடு சிதைவது போல கற்பன
சிதைத்துப் போனது..

நீங்கள் விட்டுப்போன வெற்றிடத்தில் எதை இட்டு
நிரப்புவோம்? கல்லறைப் பூக்களோடு
எங்கள் கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது.

எங்கள் ஒவ்வொரு நாளுக்கும் - இப்போ
உங்கள் பெயர் தான்
”நீங்கள் இருந்திருந்தால்” என்ற அடைமொழி
எங்கள் செயல்களை செறிவுபடுத்துகின்றது.

மகனாய், துணைவனாய், தந்தையாய், சகோதரனாய்
மருமகனாய், மைத்துனனாய், மாமனாய்,
பெரியப்பனாய் முடிவெடுக்கும் எங்கள்
செயற்றிறனாய் நின்றவர் - இன்று
மரணத்தின் கனத்தை உணர்த்துகிறீர்கள்.

இந்த நாட்களில் உங்களை நினைக்கின்றோம்,
இந்த நாட்களில் உங்களோடு வாழ்கின்றோம்,
இந்த நாட்களில் உங்களை உள்வாங்கிக் கொள்கின்றோம்,
மனிதக் கனவு மரணிப்பதில்லை..

 

தகவல்
உங்கள் பிரிவுத்துயரோடு குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள்
தொடர்புகளுக்கு
- — கனடா
தொலைபேசி:+14162197097
Loading..
Share/Save/Bookmark