அமரர் சந்திராதேவி குணசீலன்
இறப்பு : 16 செப்ரெம்பர் 2012
திதி : 16 ஒக்ரோபர் 2012

சண்டிலிப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், பழைய வீதி, கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திராதேவி குணசீலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் இராசமலர் தம்பதியரின் பாசமிகு மகளும்,

கதிரவேலு குணசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராணி, சிவபாலன்(முகாமையாளர், பான்ஏசியா வங்கி நெல்லியடி), சிவகுமாரன்(உதவிக் கல்விப் பணிப்பாளர் கணிதம், வலிகாமம் கல்வி வலயம்), சித்திராதேவி(ஹொலன்ட்), சிவசக்திவேல்(அதிபர், யா/ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யசோதா(நிகழ்ச்சித் திட்ட உதவியாளர், வலி,கிழக்கு பிரதேச சபை, புத்தூர்), சதீஸ்(லண்டன்), யமுனா(பட்டதாரி பயிலுநர், பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துவாரகனின்(ஆசிரியர் கிளி/ ஞானிமடம் அ.த.க.பாடசாலை) மாமியாரும்,

அரிஞ்சயனின் பேர்த்தியும் ஆவார்.

பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டிச்சீராட்டி
பாசத்துடன் வளர்த்த எங்கள் அன்னையே
முத்துச்சிரிப்பாலும் மோகனப்பேச்சாலும்
உச்சி முகர்ந்து வளர்த்த எம் அன்னையே
நெஞ்சு பதறுதம்மா நினைவு நெகிழுதம்மா
ஆற்ற முடியாது அலறித்தவிக்கின்றோமே...

அன்பின் பிறப்பிடமே எங்கள் அம்மா
அமைதியின் இருப்பிடமே எங்கள் அம்மா
குன்றிலிட்ட தீபம் போல நின்ற எங்கள்
குடும்பக் குலவிளக்காய் வாழ்ந்த அம்மா எம்மைப்
பெற்றவளே உம் பெயர் சொல்லி நாம் அழைத்தாலும்
பேருவகை கொள்ளும் பெரும் பேறே எங்கள் அம்மா!!!

அல்லும் பகலும் அயராது உழைத்தீர் அம்மா
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீரம்மா
உமக்கு நாம்பட்ட கடனை அடைத்து விடுவோமோ
என்ற அச்சத்தில் இடை நடுவே மறைந்து போனதேனம்மா
ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும்
ஒற்றை சூரியனாய் பிரகாசிக்குமம்மா உன் அன்பு...

கண்மூடி விழிக்கு முன் கதைமுடிந்து போனதம்மா
ஊரே அழுகுதம்மா உம்பிரிவைத் தாங்காது உம்
பிள்ளைகள் நாம் எப்படி எதனால் ஆறுவோம்
இறைவனுக்கு உம்மை அழைக்க ஏன் இந்த அவசரம்?
உள்ளம் துடிக்குதம்மா ஓடிமறைந்த தெங்கே?
ஆயிரம் ஆயிரம் நாட்கள் கடந்து போனாலும்
நீ கொண்ட அன்பும் நாம் கொண்ட தவிப்பும் ஆறாதம்மா
எங்கள் தாயே சரணம் அம்மா....!!!

எம் குடும்ப விளக்கு அணைந்த வேளையில் எம் துயர் துடைக்க நேரில் வந்து எமக்கு ஆறுதல் அளித்து தேற்றியோர், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோர், அன்னாரின் நிகழ்வில் கலந்து கொண்டோர், பல உதவிகளைச் செய்து எமக்குத் துணையாய் நின்றோர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்நத நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 16-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் பழைய வீதி, கோப்பாய் தெற்கு எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் தாங்களும் கலந்த கொண்டு அவரது ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்க அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
கணவன் மற்றும் பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779591351
சதீஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447702331667
Loading..
Share/Save/Bookmark