தோற்றம் : 11 மார்ச் 1951 — மறைவு : 3 ஒக்ரோபர் 2012
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஹொலண்டை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமாய் பண்பின் பிறப்பிடமாய் நட்பின் இலக்கணமாய் நீங்கள் காட்டிய அன்பில் நாம் துன்பங்களை மறந்தோம்...
அருகிருந்து அணைத்திருந்த உறவு கூற்றுவனின் கைகோர்த்து எம்மை விட்டு போனதென்று எண்ணித்தான் பார்க்கின்றோம் எப்படித்தான் ஆனதென்று???
நீ என்று நானென்று எம்மை வளர்த்ததில்லை நாம் என்று தான் வளர்ந்தோம் கண்டித்ததை நாம் அறியோம் கண் மூடியிருந்ததையும் நாம் அறியோம் நாம் துவண்ட போது எம்மை தூக்கிவிட்டீர்கள். நாம் துக்கப்பட்ட போது எம் துயரம் துடைத்தீர்கள்...
ஒருவேளை எம்மைக் காணவில்லையென்றால் உளம் உருகி தொலைபேசியில் அழைத்து ஆறுதலடைவீர்கள் ஆறுதலடையச் செய்வீர்கள்...
அதிசய குணங்கள் கொண்ட அற்புதத் துணைவியே இனிமையாய்ப் பேசும் இயல்புடைய இணையற்ற அன்னையே...
பேரன் பேத்திகளை ஆசையுடன் பார்த்து ஆண்டவன் தந்த செல்வங்களாக அரவணைத்த தெய்வமே எம்மை எல்லாம் பரிதவிக்க விட்டு எங்கே சென்றீர்கள்???
இறுதி நாள் அன்று அம்மா அம்மா என்று நாம் கதறியழ காலன் முந்தி விட்டான் நாங்கள் பிந்தி விட்டோம் நீ இறப்பாய் என்று நாமிருக்கவில்லை நீ இறந்த அன்று நாம் உயிர் இழந்தோம்....!!!
நடந்து முடிந்த அந்தியேட்டி கிரியைகளை தொடர்ந்து இடம்பெறும் மதியபோசனம் 04-11-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டன் சிவன் கோவில் நாவலர் மண்டபம், 4A, Clarexrise, London, SE13 5ES என்னும் முகவரியில் இடம்பெற உள்ளது. எம் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்த அனைவரையும் மதியபோசன உபசாரத்தில் கலந்து கொண்டு எமக்கு மேலும் ஆறுதல் அளிக்க வேண்டுகிறோம்.
உம் பிரிவால் துயருறும் வேலாயுதம்(கணவர் - லண்டன்), மகிந்தன்(மகன் - லண்டன்), சன்முகநாதன்(நாதன் - மருமகன் - பிரான்ஸ்), மகாமேனன்(வசந்தன்(மருமகன்) - AJ Food - லண்டன்), முகுந்தன்(மருமகன் - அவுஸ்ரேலியா) மற்றும் சகோதரங்கள்.
வீட்டு முகவரி: 7,Black lands Road, Catford, London SE6 3AE