தோற்றம் : 28 ஒக்ரோபர் 1973 — மறைவு : 12 நவம்பர் 2011
உருத்திரபுரம் சிவநகரைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு முருகவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் கருகி இமைகள் நனைகிறது உங்கள் பிரிவினிலே மீளா சோகம் தந்து சென்றீர் என் உயிரினிலே... முப்பொருளும் தந்து சென்றீர் என் வாழ்வினிலே.. உணர்வாக வாழ்கின்றேன் அதற்கெனவே காற்றாக நீங்கள் கலந்திட்ட வேளையிலே உயிர் மூச்சின்றி வாழ்கின்றேன் சுடும் தீயினிலே, மழை நின்றும் மாறாது மண் வாசம் எனை என்றும் நீங்காது உன் வாசம்....
அப்பா நான் உங்களைப் பார்க்கும்முன் பாரா முகம் காட்டி பரிதவிக்க விட்டு சென்றீர்கள் என்னை..... நாம் தூங்கும் தோள்களைப் பறித்துக் கொண்டு நீர் தூங்கச் சென்றீர் மீளா துயரினிலே... எம் கை மூடிய உம் விரல்கள் கலைந்து விட்டனவே இன்று கனவாய் ஈராறு விழிகளில் ஈரமாய் தேடுகின்றோம்.. எம்மை நீங்கிய எம் தந்தையே.. உம் நினைவை எண்ணியே வாழ்கின்றோம்..
தம்பி நீ எம்மை விட்டகன்று வருடம் ஒன்றாகி விட்டதுவே ஆனால் எம் தேம்பிய விழிகளின் ஈரம் இன்னும் காயவில்லை உம் இழப்பால் படிந்த இதயத்தின் ரணம் இன்னும் குறையவில்லை...
பாசத்தை காட்டி அக்கா, அண்ணன், தம்பியென நேசமாய் நாம் வாழ்ந்த காலம் நித்தம் நினைவிற்கு வருகுதடா மண்ணில் வாழ்வெல்லாம் பொய்யாகிப் போனது போல் உணர்த்திறது... உன் முகத்தைப் பார்க்க எம் விழிகள் ஏங்குகையில்.... உம் மழலைகளின் முகத்தில் உமைக்கண்டு எம் ஏக்கம் தீர்க்கின்றோம்.
அன்பு நிறைந்த மகனாய், பாசமிகு கணவனாய், உயிருக்கு உயிரான தந்தையாய், உடன் பிறந்த தம்பியாய், ஆருயிர் மாமாவாய், ஆசைச் சித்தப்பாவாய், மதிப்புடைய மைத்துனராய், உறவினரின் பாச மலராய், நல்ல நண்பனாய், ஊர் போற்றும் உத்தமனாய் நீர் வாழ்ந்த காலங்கள் நெஞ்சில் என்றும் பசுமையாய் நிறைந்திருக்கும்..
உமது ஆத்மா சாந்திக்காக எப்போதும் உருத்திரபுரீச்சரரை பிராத்திக்கின்றோம்.
உங்கள் பிரிவின் துயரில் வாடும் அன்பு மனைவி, பாசமிகு பிள்ளைகள், அருமை தாய், சகோதர, சகோதரிகள், மைத்துனர், மைத்துனிகள், மருமக்கள், பெறாமக்கள்..