(சிவா, மணி, சேவையர், ஐயா, ஓய்வுபெற்ற நிலஅளவை உதவி அத்தியட்சகர்)
அன்னை மடியில் : 10 ஏப்ரல் 1936 — ஆண்டவன் அடியில் : 19 யூலை 2009
இருபாலையைப் பிறப்பிடமாகவும் காங்கேசன்துறையை வாழ்விடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இருபாலையிலிருந்து இரணைப்பாலைவரை
வாகட வைத்திய பரம்பரையில் உதித்தவர்கள் நீங்கள் - இயல்பிலேயே வேகமும் விவேகமும் உடையவர் நீங்கள். உணர்வை உயர்வாய் மதித்தவர்கள் நீங்கள் - எவருக்கும் உதவும் உள்ளத்தை கொண்டவர் நீங்கள்.
இருபாலையிலிருந்து இரணைப்பாலைவரை உங்கள் அடிகள் எண்ணியே வைக்கப்பட்டன. ஒவ்வொரு அடிகளும் வரலாறாய் நிமிர்ந்தன. வாழ்க்கையில் ஏறும் படிக்கல்லாய் அமைந்தன.
நிலஅளவையாளராய் இலங்கையில் பணியை தொடங்கிய நீங்கள் உதவி நில அளவையாள அட்சகராக ஓய்வு பெற்றீர்கள். ஈராக், சவுதியில் பணியை தொடர்ந்த நீங்கள் ஈட்டிய பணத்தில் நாட்டையும் வீட்டையும் சரியாய் மதித்தீர்கள்.
எத்தனையோ புயல்கள் உங்கள் வாழ்க்கையிலே உண்டு – ஆனால் துயரத்தின் சாயல்கள் உங்கள் செய்கைகளில் இல்லை. அழகிய குடும்பத்தின் தலைவராய் இருந்தீர்கள் குடும்பத்தின் உயர்விற்கு உண்மையாய் உழைத்தீர்கள்.
இரணைப்பாலையிலிருந்து கொழும்புவரை உங்கள் எண்ணப்படி அடிகள் அமையவில்லை. விதிப்படி அல்லாமல் சதிப்படி நடத்தப்பட்டீர்கள் மீண்டெழுவோம் நாங்கள் என நம்பி எமைவிட்டுப் பிரிந்தீர்கள்.
உங்கள் பிரிவை கல்லறையில் உறங்கும் ஆன்மாவாக அன்றி கருவறையில் உருவாகும் இன்னுயிராய் நினைக்கின்றோம்.
தகவல்
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.