யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுரேகுமார் தம்பிரட்னம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் பேரிழப்புச் செய்தி கேட்டு வந்து உதவிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன், 30.07.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை Rue Rateau La Courneuve இல் உள்ள சிவன் ஆலயத்தில் அந்தியேட்டிக் கிரியைகள் நடைபெற்று, 17, Rue victor Meric 92110 clichy என்னும் முகவரியில் அமைந்துள்ள வீட்டில் நடைபெறவிருக்கும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து மதிய போசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.